ரூ.3000க்கு ஊட்டி ரயில் டிக்கெட்.. நிதியமைச்சர் பெயரில் போலி செய்தி.. பிரபல செய்தி சேனல் மறுப்பு.!
ரூ.3000க்கு ஊட்டி ரயில் டிக்கெட்.. நிதியமைச்சர் பெயரில் போலி செய்தி.. பிரபல செய்தி சேனல் மறுப்பு.!
மத்திய நிதியமைச்சர் பெயரில் போலியாக அவர் கூறியது போன்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படனும் என்ற வாசகம் அடங்கிய செய்தி உலா வருகிறது.
இந்நிலையில், இதற்கு புதிய தலைமுறை செய்தி நிறுவனம் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. இது நாங்கள் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.
இது போன்ற செயல்களை திமுகவினர்தான் செய்வார்கள் என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகினறனர். ரூ.200 வாங்கிக்கொண்டு இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு கைவந்த கலை எனவும் கூறியுள்ளனர்.