வெற்றி மாலையை சூட தயாராகுங்கள்.. முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டாக அறிக்கை.!

அதனால் தொண்டர்கள் சோர்வடையாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-30 11:19 GMT

கருத்துக்கணிப்புகளை நம்பாதீர்கள் எனவும், வெற்றி மாலையை சூடுவதற்கு தயாராகுங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் 2016 இல் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கு மாறாக அதிமுக ஆட்சி அமைத்தது.


 



அதனால் தொண்டர்கள் சோர்வடையாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இரட்டை அலையே என்னென்றும் அதிமுகவே சொல்லும். கடமை அழைக்கிறது கண்மணிகளே வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என்று உற்சாகமூட்டும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 



இந்த அறிக்கையை அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் திமுகவினர் கருத்து கணிப்புகளில் மட்டுமே வெற்றியடைந்து வருகின்றனர். நிஜத்தில் அதிமுகவே வெற்றி அடையும் என தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News