தி.மு.க ஆட்சியில் நடப்பதை கண்காணிக்க அண்ணாமலை தனி டீம் வைத்துள்ளார் - பாரிவேந்தர் சொல்லும் ரகசியம்

Update: 2022-05-08 05:43 GMT

தி.மு.க. ஆட்சியில் நடப்பதை கண்காணிப்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனி நெட்வொர்க்கே வைத்து கண்காணித்து வருவதாக பாரிவேந்தர் எம்.பி. விகடன் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவரிடம் தி.மு.க. கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிவில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, பல இடங்களில் மாநாடு நடத்தி பிரதமர் மோடியை பேச வைத்துள்ளேன். அந்த சமயத்திலும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டபோது 2,40,000 வாக்குகள் பெற்றுள்ளேன். அதற்கு வந்த தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு முயற்சி செய்தோம், ஆனால் கைகூடவில்லை. கட்சியினர் வற்புறுத்தியதால் தி.மு.க.வுன் இணைந்தோம். தற்போது இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்றதால் அவர்களுடன் இருக்கும் கூட்டணி தொடரலாம்.

மேலும், காந்தியுடன், பிரதமர் மோடியை ஒப்பிட என்ன காரணம் என கேட்டதற்கு, இளையராஜா அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் என்னுடைய பேச்சும் கவனம் பெற்றது. எனக்கும் மோடிக்கும் இருக்கும் நெருக்கம் அதிகம். கடந்த 2014ல் இருந்தே தொடர்கிறது. எங்க கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு மோடியை அழைத்து கவுரவப்படுத்தியிருக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் பிரதமர் மோடியை சந்திக்கலாம். காந்தியை போன்று தேசபக்தராக மோடி இருப்பதால் அப்படி சொன்னேன்.

தற்போது தமிழகத்தில் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே? உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, அண்ணாமலை தனியாக நெட்வர்க்கே வைத்துள்ளார். அதனை வைத்து நடப்பதை சொல்கிறார். மற்ற துறைகளை காட்டிலும் மின்சாரத்துறையில் அதிகமாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இது அந்தந்த அமைச்சரை பொறுத்துதான் இருக்கிறது. இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News