ஜனவரியில் கட்சி துவக்கம்.. 31ம் தேதி அறிவிப்பு.. நடிகர் ரஜினி பரபரப்பு ட்விட்.!

ஜனவரியில் கட்சி துவக்கம்.. 31ம் தேதி அறிவிப்பு.. நடிகர் ரஜினி பரபரப்பு ட்விட்.!

Update: 2020-12-03 12:35 GMT

நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று அனைவரும் கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் பரபரப்பான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


ஜனவரி மாதம் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம்.. இப்போ.. இல்லேன்னா எப்பவும் இல்ல..


வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்.. நிகழும்.! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழக அரசியலில் விரைவில் ஒரு மாற்றம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தற்போது ரஜினியின் ட்விட் இன்று அனைவரிடத்திலும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News