முதலமைச்சரின் தாயாரை தி.மு.க.வினர் இழிவுபடுத்தியுள்ளனர்: தாராபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு.!
அதிமுக, பாஜகவின் நோக்கம் வளர்ச்சி மட்டுமே, ஆனால் காங்கிரஸ், திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல் மட்டுமே செய்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (30ம் தேதி) தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி உரையாற்றும்போது, அதிமுக, பாஜகவின் நோக்கம் வளர்ச்சி மட்டுமே, ஆனால் காங்கிரஸ், திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல் மட்டுமே செய்கின்றனர்.
மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை திமுகவை சேர்ந்த ராசா இழிவுபடுத்தியுள்ளார். பெண்களை இழிவுபடுத்துவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை நிராகரியுங்கள் என பேசினார்.