அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையர் வெளியிட்ட புதிய உத்தரவு.!

political party new rules election commission

Update: 2021-03-09 05:57 GMT

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் வருகின்ற 12ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.




 


இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல் செய்யும் முன்னர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளதாவது: வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

அதேபோன்று மார்ச் மாதம் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறாது என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Similar News