பொள்ளாச்சி தொகுதியில் துணை சபாநாயகர் ஜெயராமன் வேட்புமனு தாக்கல்.!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் துணை சபாநாயகரும், அதிமுக வேட்பாளருமான ஜெயராமன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் துணை சபாநாயகரும், அதிமுக வேட்பாளருமான ஜெயராமன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாள் 19ம் தேதி ஆகும்.
இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் நடத்தும் அதிகாரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருடன் கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்று வரவேற்பு அளித்தனர்.