பொங்கல் பரிசு டோக்கன்.. மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குட்டு.!

பொங்கல் பரிசு டோக்கன்.. மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குட்டு.!

Update: 2020-12-29 10:41 GMT

பொங்கல் பரிசுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பொங்கல் பரிசாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே அ.தி.மு.க.வினரைக் வைத்துக்கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அ.தி.மு.க. நிதியிலிருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசுபோல காட்டிக் கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசுக்கு அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் இதனை தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. திமுக தலைவர் மக்களுக்கு வரும் பணத்தை கெடுக்க நினைக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.

Similar News