பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.. தமிழக பாஜக பொறுப்பாளர் தகவல்.!
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.. தமிழக பாஜக பொறுப்பாளர் தகவல்.!;
பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதனிடையே அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அதே போன்று பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதனிடையே சென்னையில் மெட்ரோ சேவை உட்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பிரதமர் மோடி பிப்ரவரி 25ம் தேதி மீண்டும் தமிழக வருகிறார் என கூறினார். கோவையில் அவர் அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்று கூறினார். தற்போது இருந்தே தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.