விவசாயிகளை தவறாக வழிநடத்தும் ராகுல்.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு.!
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் ராகுல்.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு.!
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி அமேதியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ராகுல் பொய்யான தகவலை அள்ளி வீசி வருகிறார்.
விவசாயிகளிடம் நீலிக்கண்ணீர் வடித்து, அவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறார். அவரது தங்கையின் கணவர் ராபர்ட் வதேரா, விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.
ராகுலுக்கு துணிவிருந்தால், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து என்னிடம் விவாதம் நடத்தட்டும். ராகுலின் குடும்பம் இவ்வளவு காலமாக விவசாயிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.