அண்ணனிடம் ஆசிபெற்ற ரஜனி.. அரசியல் பற்றி தீவிர ஆலோசனை.!
அண்ணனிடம் ஆசிபெற்ற ரஜனி.. அரசியல் பற்றி தீவிர ஆலோசனை.!
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். இந்த மாதம் கட்சி பெயரை அறிவிக்கிறார். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார வியூகம், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் போன்றவற்றில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து அவர் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். ரஜனி தனது அண்ணன் சத்தியநாராயணனிடம் அரசியல் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணாவை சந்திந்து ரஜினி ஆசி பெற்றார். பெங்களூருவுக்கு சென்றுள்ள அவர் வருகின்ற 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து புதுக்கட்சித் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதனால் வரும் 12ம் தேதி தனது பிறந்த நாளை பெங்களூருவில் உள்ள அண்ணன் சத்யநாராயணன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் ஐதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.