தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியை கடைபிடிக்கும் ரஜினிகாந்த்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியை கடைபிடிக்கும் ரஜினிகாந்த்.!
சினிமா சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர் என்றே சொல்லலாம்.
தனது கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை தயார் செய்யும் பணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் தமிழருவி மணியன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினி, தனது அண்ணனை சந்திப்பதற்காக பெங்களூரு செல்கிறார். அரசியலை விட தம்பியின் உடல்நிலைதான் முக்கியம் என்று சொன்னவர் அண்ணன் சத்தியநாராயணன்.
இதனிடையே அரசியல் கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்து விட்டதால், அது பற்றி அண்ணனிடம் கலந்து ஆலோசனை நடத்திவிட்டு, அவரது ஆசி பெற்று வரவும் பெங்களூரு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் பெங்களூரு சென்றுவிட்டு திரும்பும் வரையிலும் தமிழருவி மணியன் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்ன என்பது பற்றிய ஆலோசனை இன்று நடந்துள்ளதாம். வரும் 31ம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்க இருப்பதால், கட்சி கொடி, கட்சி சின்னம் குறித்த ஆலோசனையில் ராகவேந்திரா திருமண மண்டபம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், கட்சிக்கு என்று தனி அலுவலகம் வேண்டும் என்று ரஜினி யோசனை செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தையே கட்சியின் அலுவலகமாக மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளாராம். தற்போது விஜயகாந்த் பாணியில் திருமண மண்டபத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றி வரும் ரஜினிகாந்த, தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கு என்று தனித்தனி அறைகள் தயார் செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.