ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 2 மணி முன்னிலை விவரம்!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-10-12 10:05 GMT

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி 21 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 54 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது.மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 57, திமுகவும், அதிமுக 3ல் முன்னணியில் உள்ளது.

அதே போன்று 1328 ஒன்றிய கவுன்சிலர் பதவியில், திமுக 121, அதிமுக 21, பாமக 7 அமமுக -1 பிற - 4 என முன்னிலையில் உள்ளது. பல்வேறு இடங்களில் திமுகவினர் வாக்கு எண்ணும் மையங்களில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. ஜனநாயகப்படி தேர்தல் நடைபெறவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:The News Minute


Tags:    

Similar News