சேலம்: சசிகலா மீது காவல் ஆணையரிடம் புகார்.!
சேலம்: சசிகலா மீது காவல் ஆணையரிடம் புகார்.!
அ.தி.மு.க. கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா சென்ற சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, விடுதலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே மருத்தவமனையிலேயே அவர் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து, மருத்துவமனையை விட்டு சசிகலா தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அந்த காரில் அ.தி.மு.க. கட்சிக்கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த கொடி கட்டப்பட்ட சம்பவத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சேலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிகலா மீது புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.