அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார்.!

அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார்.!

Update: 2021-02-18 11:57 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை காலம் முடிந்து சசிகலா கடந்த 8ம் தேதி தமிழகத்திற்கு வந்தார். அவர் வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த திமுகவினருக்கு பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. அதிமுகவில் எந்த ஒரு எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களோ சென்று ஆதரவு அளிக்கவில்லை. இதனால் சசிகலா சென்னை வந்த பின்னர் எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் பங்கேற்காமல் அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில், சசிகலா தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீனவ கிராம மக்கள் கூறிய குற்றச்சாட்டை மாற்றி ராகுல்காந்தியிடம் மொழிப்பெயர்த்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

நீங்கள் எப்படி அதை பார்த்தீர்களோ, அதே போலத்தான் நானும் அந்த சம்பவத்தை பார்த்தேன் என்றும், மொழிப்பெயர்ப்பு ஒரு கலை அதனை தெரிந்தவர்கள் செய்ய வேண்டும். மேலும் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த முதன் முதலில் வெற்றியை புதுச்சேரி மாநிலம் பதிவு செய்தது. அதே போன்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News