ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சசிகலா.!
ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சசிகலா.!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சிறையில் மயக்கம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சை பெற்றார்.
இதனிடையே சி.டி.ஸ்கேன் செய்வதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரலில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு ஐ.சி.யூ.வி வார்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சசிகலா, ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றுவதற்கு மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது என கூறப்படுகிறது. திட்டமிட்டப்படி வருகின்ற 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அ.ம.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் விடுதலை செய்யப்படுவதற்கு 2 நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.