இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடம்.!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கவலைக்கிடம்.!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அவர் சிறுநீரக பிரச்சனையால் கடந்த 10 வருடங்களாக டயாலிஸ் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.