மின்தடைக்கு காரணம் நாங்கள் இல்லை.. புதிய விளக்கத்தை சொல்லும் செந்தில்பாலாஜி.!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தினமும் மின்வெட்டு ஏற்படுவதாக மாநிலம் முழுவதும் புகார்கள் வருகிறது. ஆட்சி மாறி சில நாட்களிலேயே மின்வெட்டு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. மின்வெட்டு குறித்து சமூக வலைதளங்களில் திமுக குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருவார்கள்.

Update: 2021-06-17 10:21 GMT

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருந்த காரணத்தினால்தான் மின்வெட்டு ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தினமும் மின்வெட்டு ஏற்படுவதாக மாநிலம் முழுவதும் புகார்கள் வருகிறது. ஆட்சி மாறி சில நாட்களிலேயே மின்வெட்டு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. மின்வெட்டு குறித்து சமூக வலைதளங்களில் திமுக குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருவார்கள்.

இந்நிலையில், மின்வெட்டு குறித்து சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது. பராமரிப்பு பணிகள் 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News