சசிகலாவுக்கு சிறப்பு பூஜை! அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்துடன் கோயிலில் வழிபாடு!
சசிகலாவுக்கு சிறப்பு பூஜை! அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்துடன் கோயிலில் வழிபாடு!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா பூரண நலம்பெற வேண்டி கன்னியாகுமரியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் தனது குடும்பத்துடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சசிகலா பூரணம் குணமடைந்து தமிழகத்தை வழிநடத்த வேண்டும். இதனால்தான் சிறப்பு பூஜையில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் சசிகலாவிற்காக பூஜை செய்தது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.