தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம்.. பணிகளை வேகப்படுத்தும் தேர்தல் ஆணையம்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம்.. பணிகளை வேகப்படுத்தும் தேர்தல் ஆணையம்.!

Update: 2021-01-24 16:38 GMT

தமிழக சட்டப்பேரவையின் காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையடுத்து மே 5ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முதலில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கினார். அதே போன்று தி.மு.க.வும் மக்கள் கிராம சபைகூட்டம் என்று பிரச்சாரத்தை தொடங்கியது. 

இதனிடையே இந்திய தேர்தல் ஆணையமும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதில் முதல் கட்டமாக வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக வருகின்ற பிப்ரவரி 20 மற்றும் 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் டி.ஜி.பி., தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் மே 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அளிக்கும் தகவலின் படி அடுத்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar News