விநாயகர் சதுர்த்தியால் தி.மு.க. ஆட்சியை இழக்க நேரிடும் ! - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை !

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்யும் நிலையில், ஆட்சியை இழக்க நேரிடும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்துள்ளார்.;

Update: 2021-09-01 11:02 GMT

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்யும் நிலையில், ஆட்சியை இழக்க நேரிடும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு மக்களின் பாரம்பரிய பழக்கத்தையும், உணர்வுகளையும் மதிக்க கூடிய வகையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுடன் அனுமதி வழங்க வேண்டும். தற்போது தமிழக அரசு விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் அவர் பேசும்போது, "விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கையில் எடுத்து திமுக அரசியல் செய்யும் பட்சத்தில் ஆட்சியை இழக்க நேரிடும். விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழாவை அவர்கள் நடத்துவார்கள். விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட அனுமதி வழங்குவதற்கு நீங்கள் யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Source, Image Courtesy: TopNews

https://www.toptamilnews.com/bjp-annamalai-press-meet-2/

Tags:    

Similar News