தைரியம் இருந்தா பா.ஜ.க. மீது கை வைக்கட்டும்: வட்டியும் முதலுமா தி.மு.க.வுக்கு திருப்பி கொடுப்போம்: எரிமலையாய் வெடித்த அண்ணாமலை!

பாஜக மீது கை வைத்தால் திமுகவுக்கு வட்டி முதலுமாக திருப்பி கொடுப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரவெடியாக வெடித்துள்ளார்.

Update: 2021-10-24 01:57 GMT

பாஜக மீது கை வைத்தால் திமுகவுக்கு வட்டி முதலுமாக திருப்பி கொடுப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரவெடியாக வெடித்துள்ளார்.

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவத்தை கண்டிக்கின்ற வகையில் தமிழக பாஜக சார்பில் நேற்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் வீட்டில் தீபாவளிக்காக இனிப்புகள் வாங்குவதற்காக கடையில் போய் எவ்வளவு அண்ணா ஒரு நாளைக்கு டர்ன் ஓவர் செய்வீங்க என்று கேட்டேன். அப்போது அவர் ஒரு நாளைக்கு ரூ.3000 வரை கடையில் வியாபாரம் இருக்கும் என்றார்.

ஆனால் திமுக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் 100 கோடி டர்ன் ஓவர் செய்யும் கடையில் மட்டுமே போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு இனிப்புகள் வாங்கப்படும் என்று கூறியுள்ளார். இது போன்று சொல்பவர்கள் கார்ப்பரேட் கட்சி நடத்துபவர்கள் மட்டும்தான் இது போன்று பேச முடியும் என்றார். இது போன்றவர்கள் மீது முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி பற்றி பேசுவதற்கு எவ்விந்த ரைட்டும் இல்லை. கோல் கான்ட்ராக்கட் ரத்து செய்துவிட்டனர். இன்று வரை புதுப்பிக்கவில்லை. அதிலும் 20 ரூபாய்க்கு பவர் பர்ச்சேஸ் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் பர்ச்சேஸ் செய்துள்ளனர். தமிழகத்தில் அணில்களால்தான் தான் மின்சாரம் தட்டுப்பாடு வந்ததாக கட்டுக்கதையை விட்டார். இவர்கள் கொள்ளை அடிப்பதற்காக பல்வேறு வகையில் திட்டமிடுகின்றனர். அதே போன்று தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவியது என்று கூறினர். ஆனால் தற்போது 60 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. அரசிலுக்காக பஞ்சப்பாட்டு திமுக பாடுகிறது. மேலும், தூத்துக்குடி அனல்மின் நிலையம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, திருட்டை கண்டிப்பதற்காக ஆதாரத்தை வெளியிட்டோம். அதிலும் பணம் பாக்கி வைத்தவர்களின் லிஸ்டை தற்போது எடுத்துள்ளனர்.

தமிழகம் நன்றாக இருக்கும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது வேறு பாதையில் செல்கின்றனர். அதே போன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாஜக மீது கை வைக்கிறேன் என்று எச்சரித்துள்ளார். தைரியம் இருந்தால் கை வைக்கட்டும் பார்க்கிறேன். நாங்கள் மத்தியில் ஆட்சி செய்கிறோம். குறிப்பாக பாஜக 17 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறோம். எங்களை மிரட்ட நினைத்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என்பதை திமுக இந்த பேட்டியின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: FB


Tags:    

Similar News