ஒன்றியம் என்பதில் பிரிவினை உள்ளது: தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க. தீர்மானம் நிறைவேற்றம்.!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பிரிவினை பேசும் விதமாக மத்திய அரசை ஒன்றியம் என கூறிவருகிறது. இவர்களின் பேச்சில் நாட்டை துண்டாடு விதமாக அமைந்துள்ளதாக பாஜகவினர் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசை ஒன்றியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக மற்றும் ஆதரவு பெற்ற ஊடகங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறது. இதனை தமிழக பாஜக வன்மையாக கண்டிப்பதுடன் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில், பாஜக செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. பாஜகவின் வலிமையை மேலும் அதிகப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அது மட்டுமின்றி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொரோனாவை திறம்பட கையாண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பணி சிறக்கவும், அதேபோன்று பணியாற்றிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பிரிவினை பேசும் விதமாக மத்திய அரசை ஒன்றியம் என கூறிவருகிறது. இவர்களின் பேச்சில் நாட்டை துண்டாடு விதமாக அமைந்துள்ளதாக பாஜகவினர் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒன்றியம் என்கிற சொல்லை திமுக பயன்படுத்தி வருவதை வன்மையாக தமிழக பாஜக கண்டித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய அளவில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வை எழுதி வரும் நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்கள் மட்டுமின்றி மக்களையும் ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வரும் திராவிட கட்சிகளை கண்டித்து பாஜக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.