தாராபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி, முதலமைச்சர், துணை முதலமைச்சர் நாளை பங்கேற்பு.!
தாராபுரத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாராபுரத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.
தாராபுரத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அப்போது ஒரே மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தாராபுரம் பகுதி முழுவதும் போலீசார் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.