தமிழக தேர்தல் பணியில் 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு.!
பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. 72 ஆயிரத்து 162 காவல்நிலைய போலீசாரும், 8,010 சிறப்புக் காவல் படையினரும், 23,200 துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் சுமார் 1.58 லட்சம் போலீசார் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான பரப்புரை நேற்று (5ம் தேதி) 7 மணியுடன் முடிவடைந்தது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதிமுக வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை மேற்கொண்டு வருகிறது. 72 ஆயிரத்து 162 காவல்நிலைய போலீசாரும், 8,010 சிறப்புக் காவல் படையினரும், 23,200 துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். இது தவிர ஊர்க்காவல் படையினர், தீயணைப்புப் படை வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் தவிரி பிற மாநில காவல்துறையை சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.சென்னையில் மட்டும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.