தமிழகம் - புதுச்சேரியில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பாஜக தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான பிரச்சாரம் நாளை மாலை 7 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாக சுழன்று வருகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் 6ம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து பூத்துகளிலும் துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி அதிக இடங்களில் வெல்வதற்கான முனைப்போடு களத்தில் பணியாற்றி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பாஜக தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 4ம் தேதி) மாலை 7 மணியுடன் பிரச்சாரத்திற்கான நேரம் முடிகிறது. தொலைக்காட்சி மற்றும், திரையரங்கு உள்ளிட்டவைகளில் எந்த ஒரு பிரச்சாரமும் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.