தேர்தல் முடிவு எப்போது அறிவிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்.!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Update: 2021-04-21 13:55 GMT

திட்டமிட்டப்படி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.




 


இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று குறித்தும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே செய்தியாளர்களுக்கு தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அளித்துள்ள பேட்டியில், வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறினார்.




 


மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 7 அல்லது 10 மேஜைகள் அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார்.

Similar News