தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு எல்லா விதமான சூழ்நிலையும் இருக்கின்றது - அண்ணாமலை எச்சரிக்கை!
தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்குகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.;
தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்குகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக பாஜக தலைவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதன் பின்னர் அவர் விமான நிலையத்தில் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் மட்டுமே அமைதியாக இருக்கும். மாநிலத்தில் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு எல்லா விதமான சூழ்நிலையும் இருக்கின்றது. எனவே தமிழக அரசு அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மேலும், கொழும்பு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக ஏற்கனவே தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகள் நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் மார்த்தாண்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது அடிப்படை வாதிகளின் செயல்தான காரணம். தற்போதைய சூழலில் உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரத்தை அரசு வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy:Hindu Tamil