தைப் பூச திருவிழாபோல நடைபெற்ற தமிழக பாஜகவின் 2- ம்கட்ட வேல் யாத்திரை: வடசென்னையில் குவிந்த பாஜகவினர்.!

தைப் பூச திருவிழாபோல நடைபெற்ற தமிழக பாஜகவின் 2- ம்கட்ட வேல் யாத்திரை: வடசென்னையில் குவிந்த பாஜகவினர்.!

Update: 2020-11-08 17:46 GMT
தமிழகத்தில் ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை  கருப்பர் கூட்டம் என்ற பெயரில் தொடர்ந்து ஒரு கூட்டம் அவமதித்து வந்தனர் இந்த சம்பவத்தின் பின்னணியில் திமுகவும், குறிப்பாக அதன் தலைவர் ஸ்டாலினும் உள்ளனர் என கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவனும் தொடர்ந்து இந்துக் கடவுள்களை அவமதிப்பதும், ஹிந்துப் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதுமான பேச்சுக்களை பேசி வருகிறார். எனவே திட்டமிட்டு ஒரு கூட்டம் திமுக மற்றும் அதன் தலைவர் தூண்டுதலால் தொடர்ந்து ஹிந்துக்களை அவமதிப்பதும், தமிழர்களின் பாரம்பரியத்தை நசுக்க முயற்சிப்பதும் நடைபெற்று வருகிறது. இவற்றை கண்டித்து அறவழியில் பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவங்களை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்ட வேல் யாத்திரைக்கு தடை உததரவு போட்ட தமிழக அரசு எல்.முருகன் மற்றும் அவருடன் சென்ற ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களை கைது செய்தது.

தலைவர் எல்முருகன் கைது மற்றும்வேல்  யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான பாஜகவினர் ஆர்பாட்டம் செய்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். எல்.முருகன் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன்அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் இரண்டாவது நாளாக வேல் யாத்திரை இன்று தொடங்கியது. சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.  அதன் படி சென்னை திருவொற்றியூர்  வடிவுடையம்மன் கோயிலில் இருந்து வேல்யாத்திரையை தொடரவிருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை இரண்டாவது நாளாக வேல் யாத்திரை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். யாத்திரை தொடங்கிய இடத்தில் இருந்து ஏராளமான பாஜகவினர் தலைவர் எல்.முருகன் அவர்கள் சென்ற வாகனத்துக்கு முன்பும், பின்பும் அணிவகுத்தனர். பார்ப்பதற்கு இந்த யாத்திரை வடலூர் தைப் பூச விழாவையும், மயிலம் தைக் கிருத்திகை விழாவையும் நினைவு படுத்தியதாக பலர் கூறினார்.

யாத்திரை தொடங்குவதற்கு முன் கட்சி மூத்த தலைவர்கள் பேசினர். மூத்த தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறுகையில் " இன்றைய நாள் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் பிறந்த நாள், அவர் தொடர்ந்த யாத்திரைதான் இந்தியாவில் கட்சி பிரம்மாண்டமாக வளர்ந்தது, அது போல இந்த யாத்திரையும் தமிழகத்தில் வெல்லும், அதனால்தான் இன்று இந்த யாத்திரை இன்றைய நாளில் நடத்தப்படுகிறது என்றார். மேலும்  முருகனின் பெயரான பழனிச்சாமி என்ற பெயரை கொண்ட முதல்வர் வேல் யாத்திரைக்கு தடை ஏற்படுத்தியது மிகவும் வருந்தத்தக்கது என்றார்.

முன்னாள் மாநில பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில் " காவிப்படை தமிழகத்தில் எங்கே உள்ளது என்றார் கருணாநிதி .. அது இங்கே  உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் மாநிலத் தலைவர் எல்.முருகன். அவரின் முயற்சி பிரம்மாண்டமான மாற்றத்தையும், வளர்சசியையும் தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றார்.

இறுதியாக பாஜக மாநிலத்தலைவர் முருகன் அவர்கள் பேசுகையில் " திமுகவின் தமிழ் கலாச்சார எதிரித் தனங்களை தோலுரித்துக் காட்டுவதுதான் இந்த யாத்திரையின் நோக்கம் என்றார். சங்க கால இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் - ஹிந்து கலாச்சாரத்தை வலியுறுத்தின.  நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தின.  ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து நம் தமிழ் சமுதாயத்தை தவறாக வழி நடத்துபவர்களாக திமுக, ஸ்டாலின் மற்றும் இவர்களால் தூண்டிவிடப்படும் கறுப்பர் கூட்டங்கள் உள்ளன.  

இவற்றை எல்லாம் தட்டிக் கேட்கும் கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது, வரும் தேர்தலில் பாஜக யாரை கைகாட்டுகிறதோ அவர்களே ஆட்சியமைபார்கள். திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கியபோது தன்னை போலீசார் கைது செய்தது ஒரு தவறான முடிவு" என்றார் .

Similar News