தேர்தலுக்குப் பிறகே முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படும்.. பா.ஜ.க., மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி., தகவல்.!

தேர்தலுக்குப் பிறகே முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படும்.. பா.ஜ.க., மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி., தகவல்.!

Update: 2020-12-30 13:45 GMT

தேர்தலுக்குப் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பல கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதலமைச்சர் வேட்பாளரை தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும். எனத் தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News