முதல்வர் எடப்பாடியை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்.1
#MKStalin #Edappadi #HighCourt
அரசியல்வாதிகளின் பேச்சுரிமை என்பது மற்றவர்களை காயப்படுத்தி, அவமதிக்கும் நோக்கில் இருக்க கூடாது மாறாக அனைவரும் மதிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க'வை சேர்ந்தவர்களின் பேச்சு சமீபகாலமாக அச்சில் ஏற்ற முடியாத அளவு தரம் தாழ்ந்து போய்விட்டதாக மக்களே கூறுவர். அந்த வகையில் தமிழக முதல்வர் மீதான தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் விமர்சனத்தை தவிர்க்குமாறு சென்னை உயர்நீதி மன்றமே அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள், அவர்களின் துறைகள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், அந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது பேசிய நீதிபதி, "முதல்வர், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். ஆரோக்கியமான அரசியலை உருவாக்குங்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கக்கூடாது. ஆதாயத்துக்காக கட்சி தலைவர்கள் கடும் வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல" என்று நீதிபதி சதீஷ்குமார் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.