'இந்தியா மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதல் ஒரு போதும் மறக்காது' எனக்கூறிய பிரதமர்.!

'இந்தியா மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதல் ஒரு போதும் மறக்காது' எனக்கூறிய பிரதமர்.!

Update: 2020-12-13 15:58 GMT

இந்தியா தனது பாராளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். 2001 ல் இதே நாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"2001’ல் இதே நாளில் எங்கள் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்கள் நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து உயிர் இழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நாங்கள் நினைவுகூறுகிறோம். இந்தியா அவர்களுக்கு எப்போதும் நன்றி செலுத்தும்"  என்று பிரதமர் அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மக்களவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த போது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைக் குழு இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியது. தாக்குதல் நடந்த நேரத்தில் சபை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.

டிசம்பர் 13, 2001 அன்று, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எட்டு பாதுகாப்பு வீரர்கள் உட்பட 9 பேர் இறந்தனர். ஐந்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

முகமது அப்சல் குரு, ஷவுகத் உசேன், அப்சான் குரு மற்றும் எஸ்.ஏ.ஆர். ஜீலானி ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சுமார் பத்தாண்டு காலமாக நீடித்தது. டெல்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இறுதியில் இருவரை விடுவித்ததுடன், ஒருவரின் மரண தண்டனையை உறுதி செய்தது. இந்த சம்பவம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உயர் மட்ட பதட்டத்திற்கும் பாராளுமன்றத்தின் பாதுகாப்பில் பெரிய முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News