டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்த நினைக்கும் தி.மு.க.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அரசியலுக்காக பயன்படுத்த நினைக்கும் தி.மு.க.
நாட்டில் எந்த ஒரு போராட்டம் நடந்தாலும் அதில் தி.மு.க ஈடுபட்டு குளிர்காய நினைப்பது அந்த கட்சியின் வரலாறாக இருப்பது போல் தெரிகிறது.
இன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி அருகில் காசிபூரில் போராடி வரும் விவசாயிகளை, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் சென்றால் ஏற்கனவே குடியரசு தினத்தில் திட்டமிட்டு டெல்லியை சீர்குலைத்த காரணத்தால் இவர்களது வரவும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை தி.மு.க எம்.பி'க்கள் போராடும் விவசாயிகளை சந்திக்கும் திட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனை எதிர்க்கும் விதமாக தி.மு.க எம்.பி'க்கள் அங்கேயே மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்ப துவங்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே போராடும் விவசாயிகள் மத்தியில் காலிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து குழப்பங்கள் ஏற்படுத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் லாபத்திற்காகவும், வரும் தேர்தலில் தி.மு.க எம்.பி'க்கள் என்ன செய்தார்கள் என மக்கள் கேட்டால் கூறுவதற்கு காரணமாகவும் இருக்க வேண்டும் என தி.மு.க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.