முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தேசிய தலைமை அறிவிக்கும்.. பா.ஜ.க., தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன்.!
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தேசிய தலைமை அறிவிக்கும்.. பா.ஜ.க., தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன்.!
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பா.ஜ.க., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஒருமனதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக தான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக அமைச்சர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால்தான் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிப்போம். முதலமைச்சர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை அதில் மாற்றமில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுகவின் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல என்று பதில் அளித்தார்.
விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கலாம் என தெரிகிறது.