பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மகன் - ஏமாந்த பெண் தற்கொலை முயற்சி
பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மகன் - ஏமாந்த பெண் தற்கொலை முயற்சி
தி.மு.க'வில் தலைவர்களும், செயலாளர்களும், நிர்வாகிகளும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும் அவர்களின் வாரிசுகள் முடிசூட்டப்படாத வாரிசுகள் போல் வலம் வருவதும் இவர்களின் அராஜகம் மற்றும் அதிகார பலத்தாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதும் அதனால் பலர் இன்னலுக்கு உள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் சேலம் மரவனேரி பகுதியில் தி.மு.க ஊராட்சி துணை செயலாளர் மகன் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி அதனால் அந்தப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மரவனேரி பிள்ளையார் நகரைச் சேர்ந்தவர் இந்து பிரியா. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் தனியார் சிறப்பங்காடியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சேலம் செட்டி சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்த தி.மு.க ஊராட்சி துணை செயலாளர் ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன் என்பவரும் காதலித்து வந்தனர். இதன் காரணமாக ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துப் பிரியா இரண்டு முறை கருக்கலைப்பும் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கலைச்செல்வனுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனை எதிர்த்து இந்து பிரியா பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.
இதன் காரணமாக கலைச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் போலீசாரின் சட்டப்படி நடவடிக்கையை தி.மு.க ஊராட்சி துணை செயலாளர் குடும்பத்தினர் மதிக்கவில்லை. கலைச்செல்வனுக்கு வேறொரு பெண்ணுடன் கடந்த 26-ந் தேதி திருமணத்தை நடத்தினர். இதனால், மனமுடைந்த இந்துப்பிரியா, நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் தடுத்து காப்பாற்றி அவரை காவல்நிலையம் அழைத்து சென்றனர்.