தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை.. கே.பி.முனுசாமி.!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை.. கே.பி.முனுசாமி.!

Update: 2020-12-27 11:55 GMT

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அ.தி.மு.க., தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க., கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க., தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை. 

ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த தேசிய கட்சிகளும் உள்ளே வரவிட முடியாமல் தமிழகத்தை காப்போம் என கூறினார். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News