"கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு அவர்களே மீட்க சொல்கிறார்கள்" - கேள்வி எழுப்பும் எல்.முருகன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று (ஏப்ரல் 16) சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தவர்கள் யார் என்பது அனைவருக்குமே தெரியும். தாரைவார்க்கும்போது அமைதியாக இருந்தவர்கள் தற்போது அதனை மீட்க சொல்லி வருகின்றனர்.
மேலும், மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் அமைத்து அதில் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு கடல்பாசி வளர்ப்பதற்கு என்று தமிழகத்தில் சிறப்பு பூங்கா நிறுவப்பட உள்ளது. இதுதான் முதல் சிறப்பு பூங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்களை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar