ஒற்றுமையாக இருக்க கூறியதை தவறாக புரிந்து கொண்டனர்.. அமைச்சர் வேலுமணி விளக்கம்.!
ஒற்றுமையாக இருக்க கூறியதை தவறாக புரிந்து கொண்டனர்.. அமைச்சர் வேலுமணி விளக்கம்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சசிகலா கடந்த 8ம் தேதி தமிழகம் திரும்பினார். அவர் தமிழகம் வந்த பின்னர் சில ஊடகங்கள் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற மாயை உருவாக்கி வருகிறது. அதே போன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாம் அண்ணன் தம்பிக்குள் எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது என பேசினார். இதனை சில ஊடகங்கள் சசிகலா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என திரித்து பேசினர்.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். அதில், அதிமுகவில் பிளவு என்பது சாத்தியமில்லை என்றும் அண்ணன், தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று தான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை எனவும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார் என்றும் அவர் பேசினார். அதிமுக தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் வருகின்ற 15ம் தேதி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கின்றனர். விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். இந்த விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.