தவக்களையை வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள்.. உதயநிதியை கிண்டல் செய்த அமைச்சர்.!

தவக்களையை வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள்.. உதயநிதியை கிண்டல் செய்த அமைச்சர்.!

Update: 2020-11-30 13:31 GMT

அன்று நடிகர் தவக்களையை பார்க்க கூடியது போன்று தற்போது நடிகர் உதயநிதியை பார்க்க மக்கள் கூடுகின்றனர். ஓட்டு போட மாட்டார்கள் என கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மதுரைக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார். முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 எம்.எல்.டி., குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் 17 லட்சம் மக்கள் பயனடைவார்கள். நடிகர் ரஜினி தெளிவான முடிவை எடுப்பார். அவரின் கொள்கை என்ன என்பது கட்சி துவங்கிய பின்னர்தான் தெரியவரும்.


அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை மக்கள் போற்றுகின்றனர். முதலமைச்சர் செயல்பாடுகளால் ஸ்டாலின் வயிறு எரிச்சல்படுகிறார். 2021லும் பழனிசாமி தான் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் விரும்புகின்றனர்.

முந்தானை முடிச்சு படம் வெளியான நேரத்தில் நடிகர் தவக்களையின் நடிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல ஊர்களுக்கு அவரை அழைத்து சென்று படத்தை பிரபலப்படுத்தினர். அவர் மதுரை வந்தபோதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

அன்று தவக்களையை வேடிக்கை பார்க்க வந்தது போன்று, இன்று உதயநிதியை பார்க்க மக்கள் வருகின்றனர். ஆனால் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கிண்டலடித்துள்ளார்.

Similar News