"தி.மு.க'விற்கு இது தேவையில்லாத வேலை" - ஸ்டாலின் வேல் தூக்கியதை விமர்சிக்கும் திருமுருகன் காந்தி

"தி.மு.க'விற்கு இது தேவையில்லாத வேலை" - ஸ்டாலின் வேல் தூக்கியதை விமர்சிக்கும் திருமுருகன் காந்தி

Update: 2021-01-29 07:21 GMT

"பா.ஜ.க'விற்கு பதில் கூறுவதுதான் உங்க வேலையா?" என தி.மு.க'விற்கு திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


தனியார் ஊடக யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "'தி.மு.க இந்துக்களின் எதிரி' என பா.ஜ.க'வின் பிரச்சாரத்திற்கு தி.மு.க பதில் கூற வேண்டியதே இல்லை!. அவங்க பிரச்சாரத்திற்கு பதில் கூற வேண்டியதா தி.மு.க வேலை?" என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், 'சமீபகாலமாக ஏன் உங்களை ஊடகங்களில் பார்க்க முடிவதில்லை போன்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "என்னை பேச யாரும் அழைப்பதில்லை, என் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன. மீறி நான் ஏதாவது கணக்கு தொடங்கலாம் என்றால் அங்கு வந்து என்னை திட்டுகிறார்கள்" என புலம்பும் தோணியில் பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே தி.மு.க வேல் தூக்கியது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது குறிப்பிடதக்கது.

Similar News