பதவி முடிவடையும் முன் எதிரி நாடுகளை நாசம் செய்ய பிளான் போட்ட டிரம்ப்.!

பதவி முடிவடையும் முன் எதிரி நாடுகளை நாசம் செய்ய பிளான் போட்ட டிரம்ப்.!

Update: 2020-11-17 12:11 GMT

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது 2015ம் ஆண்டு, ஈரான் பி5+1 எனப்படும் உலக வல்லரசு நாடுகளை சேர்ந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுகொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், ஈரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்து கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்காகவும், அதற்கு பதில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் 2018 ஆம் ஆண்டு 2015ம் ஆண்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி ஈரான் மற்றும் ஈரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடை விதித்தார்.

இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உறவு மேலும் பலவீனம் அடைந்தது. பிறகு 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த 6 எண்ணெய் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் வெடித்து சிதறின.

இதற்கு அமெரிக்கா ஈரான் மீது பகிரங்களாக குற்றம் சாட்டியது. பிறகு ஜூன் 20 அன்று ஹார்மஸ் நீரிணைக்கு மேல் ஒர் அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான். தங்கள் நாட்டுப் பிராந்தியத்தில் அது பறந்ததாக ஈரான் தரப்பு கூறியது. ஆனால் அது சர்வதேச பகுதியில் பறந்ததாக அமெரிக்கா கூறியது.

சமீபத்தில் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்ற ஈரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இது இரு நாடுகளிடையிலான பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஈரான் அல்லது பிற எதிரி நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பாதுகாப்புத் துறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கவலை அதிகரித்துள்ளதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவது குறித்து மூத்த ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Similar News