அ.ம.மு.கவில் இருப்பவர்கள் குள்ளநரிகள்.. அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்.!
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறது.
இதனிடையே மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிப்பட்டு வந்த நிலையில், இதனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது. தேவையின்றி பாஜக எங்களுக்கு நிர்பந்தம் கொடுப்பது போன்ற ஒரு வதந்தியை கிளப்பி வருகின்றனர்.
அமமுகவும் சசிகலாவும் ஒருபோதும் அதிமுகவில் இணைக்கப்பட மாட்டார்கள். இது சாத்தியமில்லாத ஒன்று. மேலும். அமமுக உள்ளவர்கள் குள்ளநரி கூட்டம். அதிமுக என்பது சிங்கம் போன்றது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.