தமிழகத்தில் இரண்டு எம்.பி. தொகுதிகள் காலியாகும்.? ஈரோட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.!

தமிழகத்தில் இரண்டு எம்.பி. தொகுதிகள் காலியாகும்.? ஈரோட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி.!

Update: 2021-02-20 17:39 GMT

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள காலிங்கராயன் பாளையத்தில் பாஜகவில் தேசபக்தர்கள் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், 7 பேரை மன்னித்து விட்டதாக ராகுல் பேசியிருப்பது குறித்த கேள்வி எழுப்பினர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்துவிட்டதாக ராகுல் தெரிவித்துவிட்டார். 

ஆனால், 7 பேரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசும் தனது நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்து விட்டது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் 7 பேரில் 4 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம். மத்திய அரசு இதில் சிந்துதான் முடிவெடுக்க முடியும் என்றார்.

மேலும், 2ஜி வழக்கு பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, விரைவில் வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது கண்டிப்பாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாகும் என்று சூசகமாக கூறினார். அவர் கூறியது பார்த்தால் கனிமொழி மற்றும் ராசாவின் தொகுதிகள்தான் காலியாகும் என தெரிகிறது. விரைவில் இவர்கள் திகார் சிறைக்கு செல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News