இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கும் உதயநிதி.. பேஸ்புக் வீடியோவால் சர்ச்சை.!

இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கும் உதயநிதி.. பேஸ்புக் வீடியோவால் சர்ச்சை.!

Update: 2020-11-12 15:17 GMT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார். அதில் நேற்று (11.11.2020) ஒரு தூத்துக்குடி பற்றி சர்ச்சையான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் இந்திய பகுதியான ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு இருந்த வரைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்திய நாட்டில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒரு நாட்டோட எல்லை கூட தெரியாமல் மற்ற நாட்டுடன் ஒப்பிட்டு உள்ள இந்திய வரைப்படத்தை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.


உதயநிதி தாத்தா மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்திருந்தார். அது போன்று தற்போது இந்திய நாட்டோட வரைபடம் தெரியாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவான புகைப்படம் கூடிய வரைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அவருடைய அறியாமையை காண்பிக்கிறது என்று திமுகவில் உள்ளவர்களிடையே பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில், பாஜகவை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தை பதிவிட்டு, தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவான வரைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஏதேனும் திமுகவை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Similar News