வெல்க உதயநிதி என தி.மு.க எம்.பி கோஷமிட்டதால் இன்று நாடாறுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க ஆட்சியில் மக்கள் கஷ்டத்தை புரிந்துகொண்டு எம்.எல்.ஏ, எம்.பி'க்கள் அதற்கு நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ, தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி மனம் குளிர அவரை புகழ்வதை தங்கள் தார்மீக கடமையாக நிறைவேற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
அந்த மூன்று பேரில் ராஜேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டபோது உறுதி மொழி ஏற்ற பிறகு "வெல்க ஸ்டாலின், வெல்க அண்ணன் உதயநிதி" என்று முடித்தார். அதற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு "வெளியில் சென்று முழக்கமிடுங்கள்" என்று கூறினார். பதவி ஏற்பின் போது சம்மந்தம் இல்லாமல் உதயநிதி புகழ் பாடியதால் சபையில் தி.மு.க எம்.பியை பார்த்து அனைவரும் சிரித்தனர்.