பகுஜன் சமாஜ் கட்சிக்கு இப்படி ஒரு நிலைமையா: அதிர்ச்சியில் மாயாவதி!
உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்தது பகுஜன் சமாஜ். ஆனால் இந்த முறை வெறும் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.;
உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்தது பகுஜன் சமாஜ். ஆனால் இந்த முறை வெறும் 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதற்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 4 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 1984ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் கன்ஷிராம் மறைவிற்கு பின்னர் மாயாவதி 4 முறை ஆட்சியை பிடித்துள்ளார்.
ஆனால் அதற்கு பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் இதே போன்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை பார்த்து மாயாவதி அதிர்ச்சி அடைந்திருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறியுள்ளனர்.