ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு சட்டமன்றத்தில் இடமில்லையா.. பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கேள்வி.!

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு நேரம் தரவில்லை. நான் பேச முயற்சித்தபோது எந்த ஒரு நேரமும் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Update: 2021-06-26 12:32 GMT

தமிழக சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் வார்த்தை இடமில்லையா என்று பாஜக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.




 


இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்களோ, அதைப் பற்றி எல்லாமே மேம்போக்காக முயற்சி செய்கிறோம் என சொல்லிதான் சட்டமன்ற முதல் கூட்டத்தொடரை நடத்தி முடித்துள்ளனர். தேர்தலின்போது மதுபானக் கடைகளை படிப்படியாக மூடப்படும் என்றனர். அது தொடர்பாக ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை.




 


மேலும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எழுப்பிய கேள்விக்கு எந்த ஒரு உத்தரவாதமும் சட்டமன்றத்தில் அளிக்கவில்லை.

அது மட்டுமின்றி சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் வார்த்தை இல்லாமல் இருப்பது பெருமை என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியுள்ளார். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை சட்டசபையில் இல்லாத நிலை உருவாகும் என்றால், தங்களின் உயிர்களை தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு இந்த சட்டமன்றம் என்ன சொல்லப்போகிறது என கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு நேரம் தரவில்லை. நான் பேச முயற்சித்தபோது எந்த ஒரு நேரமும் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News