போடாத சாலைக்கு ரூ.3 கோடி எடுத்துட்டாங்க: தி.மு.க. அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

Update: 2022-04-05 11:56 GMT

கரூர் மாவட்டத்தில் சாலை பணிகள் செய்யாமலேயே ரூ.3 கோடி பணத்தை எடுத்துள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பான குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி உள்ளிட்ட சாலைகளை கட்சியினருடன் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், திமுக ஆட்சியில் 170 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. அதில் ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி உள்ளிட்ட சாலைகளில் வேலை செய்யாமலேயே பணத்தை எடுத்துள்ளனர். நல்ல முறையில் உள்ள சாலைகள் மீண்டும் புதிதாக போடப்பட்டதாக கூறி சுமார் ரூ.3 கோடி அளவுக்கு அரசு பணத்தை எடுத்துள்ளனர். திமுக ஆட்சி என்றாலே தில்லு முல்லுதான் என்றார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News