வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதில் மேற்கு வங்கம் 2ம் இடம்: ரூ.331 கோடி பறிமுதல்.. தேர்தல் ஆணையம் தகவல்.!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தலின் போது வாக்களார்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுத்து வரும் தேர்தல் பறக்கும் படையினர், இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் செய்துள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்கத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்கள், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு அதிகமான பணத்தை வழங்கி வருவதாக, அம்மாநில பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.