வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை: மக்களின் நலனுக்காக பா.ஜ.க. ஆட்சி செய்கிறது: பிரதமர் மோடி!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மற்றும் நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். மேலும், 8300 கோடி மதிப்பில் டெல்லி, டேராடூன் பொருளாதார வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-12-04 12:50 GMT

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பொதுமக்களை சுயசார்பற்ற நிலைக்கு தள்ளி உள்ளனர். தமது அரசு எப்போதும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை எனவும், பாஜக எப்போதும் நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுகிறது என்றார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 288 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால் பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source,Image Courtesy: ANI

Tags:    

Similar News